இந்த நடிகையை நினைவிருக்கா உங்களுக்கு.. இப்ப என்ன பண்றாங்கனு தெரியுமா..?


1991 ஆம் ஆண்டு ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மோகினி.

இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தார். ஈரமான ரோஜாவே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தின் பாடல்களும் ஹிட் ஆனது.

இதனால், தனது முதல் படத்திலேயே நடிகை மோகினிக்கு ஒரு ப்ரேக் கிடைத்தது. அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மோகினி நடிப்பில் தமிழில் வெளியான., புதிய மன்னர்கள் , நாடோடி பாட்டுக்காரன் போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.

அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு ‘பரத்’ என்கின்ற தொழிலதிபருடன் அவருக்கு திருமண நடந்தது.


திருமணத்திற்கு பிறகு மோகினி அமெரிக்காவில் செட்டில் ஆனார். இந்த தம்பதிக்கு ருத்ரகேஷ் என ஒரு மகன் உள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

காலப்போக்கில் இவரது திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விண்ணப்பித்தார். இருவரும் சரியாக ஆஜர் ஆகாதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

அதன் பிறகு 2011 ஆண்டு ‘கலெக்டர்’ என்ற ஒரு மலையாள படத்தில் மோகினி நடித்தார். அதன் பின்னர் அவரை எந்த படங்களிலும் பார்க்க முடியவில்லை.

பிறப்பில் இந்துவான மோகினி தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறி அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக இருந்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!