பிக்பாஸ் ஹீரோவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!! பாருங்க நீங்களே அசந்துருவீங்க..!!!


சமீர் பரத் ராம் இயக்கும் காதல் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதிலும் குறிப்பாக ஓவியா அவரை காதலித்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

மாடலாக இருத ஆரவ் தற்போது ஹீரோவாகிவிட்டார்.


சரவணன்
ஆரவ்

சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சமீர்
காதல் கதை


இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.

மணிகண்டன்
ஹீரோயின்கள்

சமீர் இயக்கும் படத்தில் இரண்டு ஹீரோயின்களாம். திரைக்கதையை மணிகண்டன் எழுத, வசனங்களை நலன் குமாரசாமி எழுதுகிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறது.

ஹீரோ
ஏன்?


தற்போது உறவுகள் எப்படி இருக்கிறது என்பதை பற்றியே படம். இந்த படத்திற்கு ஆரவ் தான் பொருத்தமான ஹீரோ என்று நினைத்தேன் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி