தன்னுடைய ஆபாச படங்களை நீக்கக் கோரி போலீசில் முறைப்பாடு..!! பிரபல நடிகை


கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆபாசப் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுசித்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தை வி‌ஷமிகள் சிலர் முடக்கி அவதூறு கருத்துகளையும், படங்களையும் பதிவு செய்துள்ளனர் என்று இதுகுறித்து விளக்கம் அளித்தார். மேலும் சைபர் க்ரைம் போலீசில் புகாரையும் தெரிவித்தார். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நண்பன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது. இதையடுத்து டுவிட்டரில் இருந்து ஆபாச படத்தை நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் நடிகை அனுயா புகார்அளித்துள்ளார்.


இது தொடர்பாக மும்பை பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அளித்த புகார் மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த ஆபாச படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

இதைத் தொடந்து இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே விசாரணையை தொடங்கிவிட்டதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!